வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 நவம்பர் 2024 (14:21 IST)

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

Vijay
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், கடந்த மாதம் விக்கிரவாண்டி அருகே முதல் மாநில மாநாட்டை பிரமாண்டமாக நடத்தினார் என்பதும் அந்த மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தில் சுமார் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில், அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வழிகாட்டு குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த குழுவில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற மற்றும் மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெற இருப்பதாகவும், சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவது, மாவட்ட அளவிலான வழக்கறிஞர்கள் அணியை கட்டமைக்கும் பணியை இந்த குழு மேற்கொள்ளும் என தகவல் வெளியாகி உள்ளன.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மீது ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் அந்த வழக்கை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்த குழு முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டு வருகிறது.  


Edited by Siva