செவ்வாய், 20 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 டிசம்பர் 2025 (16:52 IST)

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!
திராவிட கட்சிகளில் பிரபல பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் இன்று  நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் சம்பத், சென்னையில் உள்ள பனையூர் தவெக அலுவலகத்தில், கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். மதிமுக, அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இவர் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
 
கடந்த சில வாரங்களாகவே இவர் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், தற்போது கட்சியில் இணைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், நாஞ்சில் சம்பத்தின் வருகை, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 4-5 மாதங்களே உள்ள நிலையில், தவெகவின் பரப்புரைப் பணிகளுக்குப் பெரும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran