விஜய் என்ன தேச துரோகியா? நீதிமன்றத்தில் காரசார விவாதம்
விஜய் மீது கூறப்பட்ட நியாயமற்ற விமர்சனங்களை நீக்க வேண்டும் என விஜய் தரப்பு வாதாடியது.
தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.
மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணை சமீபத்தில் வந்தது. அப்போது ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துவிட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் விஜய் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது நடிகர் விஜய்யை ஏதோ தேசவிரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது என்று விஜய் தரப்பு வாதாடியது. மேலும், தனி நீதிபதி தெரிவித்த தேவையில்லாத கருத்துக்களை நீக்க வேண்டும் எனவும் கோரினர்.
இதே போன்ற வழக்குகளில் வெறுமனே நிராகரித்த நீதிமன்றம், விஜய் வழக்கில் மட்டும் அவரை பற்றி விமர்சித்துள்ளது. விஜய் மீது கூறப்பட்ட நியாயமற்ற விமர்சனங்களை நீக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.