1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (11:25 IST)

விக்ரம் படத்தில் கமலுக்கு மகனாக நடிக்கப்போவது இவர்தானாம்!

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

கமல்ஹாசன், பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் கடந்த வாரம் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் நிலையில் இப்போது புதிதாக நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் படத்தில் கமலுக்கு மகனாக நடிக்க உள்ளாராம். இவர் கமலின் நண்பரும் நடிகருமான ஜெயராமின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.