நடிகர் விஜய் படம் மீதான வழக்கு ரத்து...நீதிமன்றம் உத்தரவு

sinoj| Last Modified திங்கள், 26 ஜூலை 2021 (16:31 IST)

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான படம் சர்க்கார். இப்படத்தில் அரசின் இலவசப் பொருட்களை வீசுவது போல காட்சிகளை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அமைத்திருந்தார்.

இதுகுறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தணிக்கை செய்த திரைப்படத்தை தடை விதிக்க முடியது எனக் கூறி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது போலீஸார் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :