1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. tn2026 movie director explanation about controversy

விஜய் ஒரு சிங்கம். அவரை அவமரியாதை செய்ய முடியுமா?!. TN2026 இயக்குனர் விளக்கம்!...

tn2026
நடிகராக தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து முன்னணியை நடிகராக இருந்தவர் விஜய். அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த ரசிகர்கள் கூட்டத்தை நம்பியே தற்போது விஜய் அரசியலுக்கும் வந்திருக்கிறார். விரைவில் அவர் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளார். வருகிறார்.

தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் தமிழகமெங்கும் அவர் சுற்றுப்பயணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார்.. ஏற்கனவே சில ஊர்களுக்கும் சென்ற பிரச்சாரம் செய்தார். விரைவில் புதுச்சேரிக்கு செல்லவிருக்கிறார்.இந்நிலையில்தான் காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி இயக்கியுள்ள TN2026 படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் கோபப்படுத்தியிருக்கிறது.

ஏனெனில் அந்த படத்தில் நடித்துள்ள நட்டி நடராஜின் கதாபாத்திரம், அவரின் தோற்றம் எல்லாமே விஜயை நினைவுபடுத்துவது போல் இருக்கிறது. மேலும் ‘சினிமா நடிகன்னா நாட்டில் வாழு.. ஆனா நாட்டை ஆளணும்னு ஆசைப்படாத’ என அரசியல்வாதிகள் விஜய் பார்த்து சொல்வது போல வசனங்கள் இடம் பெற்றிருக்கிறது.

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாகவே விஜய் ரசிகர்களும், தவெகவினரும் நட்டி நடராஜையும், படக்குழுவினரையும் கடுமையாக திட்டி வருகிறார்கள். மேலும், தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி விளக்கமளித்த படத்தின் இயக்குனர் உமாபதி ‘இது முழுக்க முழுக்க அரசியல் படம்.. யாரையும் அவமரியாதை செய்யும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் அவமரியாதை செய்துவிட்டதாக நீங்கள் சொல்லும் நபர் ஒரு சிங்கம்.. ஒரு சிங்கத்தை அவமரியாதை செய்ய முடியாது.. சினிமாவை சினிமாவாக பாருங்கள்’ என்று விளக்கமளித்திருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
Kaalidas 2 : காளிதாஸ் 2 பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: முதல் நாள் வசூலால் அதிர்ச்சியில் படக்குழு