புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (11:02 IST)

சும்ம இருந்தவன சீண்டி விட்டு... டெய்லி மாஸ் காட்டும் விஜய்!!

தனது ரசிகர்களுக்காக வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்த விஜய் தற்போது பஸ்  மீது எறி மீண்டும் அட்ராசிட்டி செய்துள்ளார். 
 
சமீபத்தில் நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் விஜய் படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்துவரப்பட்டார். இந்த சம்பவம் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எல்லா பிரச்சினைகளும் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தளம் சென்றார் விஜய். 
 
ஆனால், அவருடைய மாஸ்டர் படப்பிடிப்பு நடந்த நெய்வேலி சுரங்கத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாட் படபிடிப்பு தளத்தின் முன் குவிந்தனர். இதனிடையே வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக் கொண்ட அந்த புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார். 
 
இதையடுத்து தினமும், அவரை பார்க்க ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆயிரக்கணக்கில் அவரது ரசிகர்கள் அவருக்காக காத்திருக்க, வேனைத் தொடர்ந்து இப்போது பஸ் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.