செவ்வாய், 25 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 மார்ச் 2025 (15:07 IST)

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

Kunal Kamra

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து அவதூறாக பேசியதாக தேடப்பட்டு வரும் குணால் கம்ரா தான் தமிழ்நாட்டில் உள்ளதாக பேசியுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.

 

மகாராஷ்டிராவில் மேடை நகைச்சுவை கலைஞராக இருந்து வந்த குணால் கம்ரா, அம்மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோபமடைந்த சிவசேனா தொண்டர்கள் கம்ராவின் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கினர். மேலும் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

அவரது ஸ்டுடியோ விதிமுறைகளுக்கு புறம்பாக கட்டப்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் அதை இடித்தனர். ஆனால் இதுவரை தான் பேசியதற்கு குணால் கம்ரா மன்னிப்பு கேட்காத நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்றும் தெரியாமல் இருந்து வந்தது.

 

இந்நிலையில் தற்போது ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷினெட்டே ஷேர் செய்துள்ளார். அதில் குணால் கம்ராவுக்கு போன் செய்து எச்சரிக்கை விடுக்கும் சிவசேனா தொண்டர் ஒருவர், ”நீ நிகழ்ச்சி நடத்திய ஓட்டல் என்ன ஆனது என்று பார். நாங்கள் உன்னை எங்கு கண்டாலும் இதே நிலைதான்” என்று மிரட்டுகிறார்.

 

மேலும் ‘நீ எங்க இருக்கன்னு சொல்லு..” என கம்ராவை கேட்கிறார். அதற்கு கம்ரா “நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன். வாருங்கள்” என பேசுகிறார். இந்த ஆடியோ வைரலாகி வருவதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K