1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (10:45 IST)

திமுக தலைவர் ஆகிறாரா விஜய்? டுவிட்டரில் டிரெண்ட்

திமுக தலைவர் பதவி கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி அவர்களிடமும் தற்போது அவரது மகன் முக ஸ்டாலின் அவர்களிடம் இருந்து வரும் நிலையில் திடீரென இன்று காலை முதல் டுவிட்டரில் திமுக தலைவர் விஜய்’ என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி உள்ளது 
 
தற்போதைய நிலையில் திமுகவை காப்பாற்ற, திமுகவை ஆட்சியில் அமர்த்த விஜய்யால் மட்டுமே முடியும் என்றும் விஜய்யை திமுக தலைவராக முக ஸ்டாலின் அமர்த்தினால் கண்டிப்பாக திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் கூறி வருகின்றனர்.
 
பிரசாந்த் கிஷோர் போன்றவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தேவையில்லை என்றும் திமுக தலைவர் பதவியை விஜய்யிடம் கொடுத்துவிட்டு ஒரே ஒரு முறை அவரை சுற்றுப்பயணம் செய்து வரச் சொன்னால் போதும் திமுக ஆட்சியை பிடித்து விடும் என்றும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
ஆனால் பரம்பரை பரம்பரையாக திமுகவை வழிநடத்தி வரும் கருணாநிதி குடும்பம் இதற்கு சம்மதிக்குமா? என்பது கேள்விக்குறியே