வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 பிப்ரவரி 2020 (21:30 IST)

விஜய் ரசிகையாக மாறிய முன்னணி நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய திரைப்படங்கள் உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மேகாஆகாஷ். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்திலும் தமிழில் 2 படத்திலும் நடித்து பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்
 
இந்த நிலையில் சமீபத்தில் ஹிந்தி படப்பிடிப்பின்போது அவர் நடித்த ஒரு காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த காட்சியில் ’நீ மகேஷ்பாபு ரசிகரா? என்று ஒருவர் கேட்க அதற்கு தான் தளபதி விஜய் ரசிகை என்று கூறியுள்ளார். இந்த பதில் குறித்து அவர் கருத்து கூறுகையில் ’ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகர் என்று கூறினால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் என்மீது கோபப்படுவார்கள் என்று எனக்கு தெரியும். இருப்பினும் என்னால் பொய் சொல்ல முடியாது என்றும் அதனால்தான் விஜய் ரசிகர் என்று துணிச்சலாக கூறினேன் என்று கூறினார் 
 
மேகா ஆகாஷின் இந்த பதிலுக்கு விஜய் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் அஜித் உட்பட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது