செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (08:53 IST)

விஜய்யை சூப்பர் ஸ்டார் என அழைத்த விளையாட்டு வீராங்கனை

விஜய்யை சூப்பர் ஸ்டார் என அழைத்த விளையாட்டு வீராங்கனை
சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனை அலிஷா அப்துல்லா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நடிகை ரம்யா பாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் விஜய் மட்டுமே’ என்று கூறியுள்ளார் 
 
மேலும் கஸ்தூரி உள்பட பல திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யை சூப்பர் ஸ்டாராக மாற்றியது ஒரே ஒரு செல்பி புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்று விஜய் தனது டுவிட்டர் இணையதளத்தில் பதிவு செய்த செல்பி புகைப்படம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது என்று கூறலாம் விஜயை பிடிக்காதவர்களுக்கு கூட இந்த செல்பி புகைப்படம் பிடித்து விட்டதாகவே கருதப்படுகிறது 
 
மேலும் பல திரையுலக பிரபலங்கள் இந்த புகைப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் விஜய் என்று கமெண்ட்டுகள் அளித்து வருகின்றனர் பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் நடுநிலையாளர்களும் அரசியல் விமர்சகர்கள் கூட இந்த செல்பி புகைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறி வருகின்றனர்
 
ஒரு செல்பி புகைப்படம் ஒருவரது வாழ்வில் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்றே கருதப்படுகிறது