வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (14:30 IST)

வீடியோவை பதிவு செய்ததும், நீக்கியதும் அட்மின் தான்: திருமாவளவன் விளக்கம்..!

ஆட்சியிலும் பங்கு வேண்டும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் பேசிய பழைய வீடியோ அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் அந்த வீடியோ நீக்கப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள திருமாவளவன் வீடியோவை பதிவு செய்ததும் நீக்கியதும் தனது அட்மின் என்று தெரிவித்துள்ளார்.

சில மணி நேரங்களுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக வலைதள பக்கத்தில் ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று முழங்கிய வீடியோ பதிவானது. இதனால் திமுக தரப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை உடனடியாக அந்த வீடியோ நீக்கப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் அதற்கு முன்பு நெட்டிசன்கள் அந்த வீடியோவை டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் திருமாவளவன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு நீண்ட நாள் காலமாக உள்ளது. எக்ஸ் தலத்தில் இருந்து வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக அட்மின் இடம் விசாரித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran