புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 செப்டம்பர் 2024 (07:50 IST)

“ஆள்றதுக்கு மட்டுமில்ல வாழ்றதுக்கே அதிகாரம் தேவயா இருக்கு..” -கவனம் ஈர்க்கும் சசிகுமாரின் ‘நந்தன்’ டிரைலர்!

இயக்குனர் இரா சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே என்ற படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இப்போது மீண்டும் சசிகுமார் – இரா சரவணன் கூட்டணி நந்தன் படத்துக்காக இணைந்துள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி மற்றும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியானது முதலே கவனம் ஈர்த்த நிலையில் தற்போது டிரைலர் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹெச் வினோத், இயக்குனர் சமுத்திரக்கனி, மற்றும் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டு படம் பற்றி பேசினர்.

டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் படம் உள்ளாட்சி தேர்தல்களில் நடக்கும் சாதிய பாகுபாடுகளை பேசும் வண்ணம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. பட்டியலின பிரிவை சேர்ந்த சசிகுமார் கதாபாத்திரம் ஊரின் பணக்காரர் ஒருவரை எதிர்த்து தேர்தலில் நின்று வெற்றி பெறுவதேக் கதை என்பதை காட்சிகள் கோடிட்டு காட்டுகின்றன.  படத்தைப் பற்றி சீமான் மற்றும் ஹெச் வினோத் ஆகியோர் பாராட்டி பேசியிருப்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகியுள்ளது. படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.