1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:07 IST)

வேங்கைவயல் விவகாரம்: சோதனை செய்த 31 பேரின் டி.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை!

வேங்கைவயல்  சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகிய போதிலும் அந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் 31 பேர்களின் டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சோதனை செய்த 31 பேரின் டிஎன்ஏவும் ஒத்துப் போகவில்லை என தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
வேங்கைவயல்  கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த  சமூக விரோதிகளை கண்டுபிடிக்கும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது 
 
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில்  221 பேரிடம் விசாரணை நடத்தி 31 பேரிடம் டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 31 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவு சமீபத்தில் வந்துள்ளதாகவும் இதில் யாருடைய டிஎன்ஏவும் ஒத்துப் போகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனால் வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva