1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (11:35 IST)

குட்டி ஸ்டோரி சொல்ல தலைவர் ரெடி! - 'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு விழா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த  'லால் சலாம்'  படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் இடம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த திரைப்படம் லால் சலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் ஸ்ரீ சாய்ராம் கல்லூரியில் இந்த விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான் அவர்கள்  பாடல்களை இசைப்பார் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குட்டி கதை சொல்வார் என்றும் லைக்கா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.
 
ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், ஜீவிதா, செந்தில் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
 
Edited by Mahendran