திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:06 IST)

ஜெயலலிதா வழக்கில் ரூ.5 கோடி கட்ட வேண்டும்..! தமிழக அரசுக்கு பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

jayalalitha
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைர நகைகள் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விடும்படி வலியுறுத்தி பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

jaya
இந்த வழக்கை விசாரித்து வந்த  நீதிபதி மோகன்,  ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக தமிழக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்த வழக்கை தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு மாற்றியதற்கான செலவுத் தொகையாக ரூ. 5 கோடியை தமிழக அரசு கர்நாடகத்துக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

 
மேலும், ஜெயலலிதாவின் நகைகளை தமிழக உள்துறை அமைச்சக அதிகாரிகள் சரிபார்த்து பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி மோகன் தெரிவித்துள்ளார்.