1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Velmurugan accepts Stalin condition

ஸ்டாலின் சொன்னதிற்கெல்லாம் ஒகே சொன்ன வேல்முருகன்!

ஸ்டாலின்
சட்டமன்ற தேர்தலில் திமுக உடனான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முதற்கட்ட கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சு வார்த்தை  சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை கொண்டுவந்து பாசிச பாஜக அரசு தமிழ்நாட்டையே சுடுகாடாக்கி கொண்டிருக்கின்றனர். பாசிச மத வெறி பிடித்த பாஜக அரசை தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்க திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும். அதனடிப்படையில்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி திமுக கூட்டணியில் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளோம்.
 
திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று நடந்துள்ளது. திமுக தலைமை எத்தனை இடங்களை ஒதுக்கினாலும் அதில் போட்டியிடுவோம். இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு கொடுத்து கையெழுத்து ஒப்பந்தமாகும்.
 
திமுக ஒதுக்கீடு செய்யும் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போட்டியிடும். அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு அளித்தால் தான் சமூகநீதி பாதுகாக்கப்படும்.
About Writer
Sugapriya Prakash