1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (12:01 IST)

பாஜகவை வீழ்த்துவதே பிரதானம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் !

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 
திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் மாற்று ஆட்சி அமைத்திட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்திருந்தது.
 
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிடுவது என்று தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்து ஆனது. பாஜக வையும் அதிமுக வையும் எதிர்த்து அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். 
 
ஆறு தொகுதிகள் குறைவான எண்ணிக்கை என்றாலும் அதிமுக பாஜக விற்கு வெற்றி பெற சிறு வாய்ப்பைக் கூட விட்டு விடக் கூடாது என்பதற்காக இதனை ஏற்றுக் கொள்கிறோம். அதிமுக பாஜக படுதோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த உடன்பாட்டில் கையெழுத்து போட்டுள்ளாம். 
 
திமுக தலைமையிலான இந்த கூட்டணி அமோக வெற்றி பெறச் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடுவோம். 6 இடங்களைப் பெற்றது மகிழ்ச்சியா வருத்தமா என்று சொல்லமுடியாது பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பது பிரதானமாக உள்ளது. பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வந்தால் தமிழகம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.