வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (11:32 IST)

அதிமுக - அமமுக கூட்டணி சாத்தியமா?

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,500, ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசம் என பழனிசாமி அதிரடி அறிவிப்பு. 

 
குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என திருச்சி மாநாட்டில் ஸ்டாலின் அறிவித்த நிலையில் இன்று ரூ. 1,500 வழங்கப்படும் என இன்று அதிமுக அதிரடியாக அறிவித்துள்ளது.
 
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி, 'விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்தார்.
 
இந்நிலையில் இன்று கட்சி தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட அறிக்கை. 
 
குடும்பத்தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என நாங்கள் அறிவிக்க இருந்த திட்டம் தி.மு.க.விடம் முன்கூட்டியே கசிந்து விட்டதால்,தி.மு.க. அறிவித்துவிட்டது. நாங்கள் குடும்பத்தலைவிகளுக்கு மாதா மாதம் ரூ. 1,500 வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.
 
ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். அதிமுக அமமுக, இணைப்பு இல்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டோம். இவ்வாறு அறிவித்தனர்.