செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (15:33 IST)

எதிர்ப்பார்க்காத விலையை எட்டிய காய்கறிகள்: கலக்கத்தில் மக்கள்!

காய்கறி சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதை தொடர்ந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை கடந்த 5 ஆம் தேதி முதல் மூடப்பட்டது. கோயம்பேடுக்கு மாற்றாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால், சந்தையில்லாத காரணத்தால் காய்கறிகளின் வரத்து மிக மிக குறைந்ததால், காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 30 ரூபாய்க்கும், வெங்காயம் 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 
 
உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் 45 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 50 ரூபாய்க்கும், முள்ளங்கி 50 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
பச்சை மிளகாய் கிலோ 80 முதல் 90 ரூபாய்க்கும், இஞ்சி 100 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.