செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 8 மே 2020 (13:00 IST)

கோயம்பேட்டிற்கு மாற்று; சிஎம்டிஏ சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு!

தற்காலிக காய்கறி சந்தை மே 10 ஆம் தேதி முதல் செயல்படும் என சிஎம்டிஏ அறிவித்துள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புள்ளவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக திருமழிசை பகுதியில் காய்கறி மார்கெட் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால் இதுவரை அங்கு மார்க்கெட் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே, கோயம்பேடு சந்தைக்கு மாற்றாக திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தை மே 10 ஆம் தேதி முதல் செயல்படும் என சிஎம்டிஏ சற்றுமுன் அறிவித்துள்ளது.