1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (18:59 IST)

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுக்கு பாஜகவில் பதவி

சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுக்கு பாஜகவில் பதவி
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து எல்.முருகன் அவர்கள் சமீபத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். அதில் நடிகை நமீதா, நடிகை குட்டிபத்மினி, நடிகை கௌதமி, நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் நடிகை மதுவந்தி ஆகியோர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று வெளியான தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலில் நடிகர் ராதாரவி, இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி கிடிஅத்துள்ளது. அவர் மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் முரளிதரராவ் முன்னிலையில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது