செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (13:45 IST)

திறமையை வெச்சு பணம் மட்டும் சம்பாதிக்க கூடாது! – பிரதமர் மோடி!

உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி இளைஞர்களுக்காக பேசியுள்ள பிரதமர் மோடி திறமைகளை பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக கருதக்கூடாது என கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களின் திறனை வளர்க்க ஸ்கில் இந்தியா என்ற திட்டம் 2015ல் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி மக்களுக்கு உரையாற்றியுள்ள பிரதமர் மோடி ”கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் பலர் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த நாள் உங்கள் திறமைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகான உலகில் புதிய சவால்கள் நமக்கு காத்துள்ளது.

இளைஞர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். பணம் ஈட்ட மட்டுமே திறன்கள் என எண்ணாதீர்கள். ஒரு திறமையான நபர் தனது வாய்ப்புகள் எதையும் விட்டுவிட கூடாது” என்று கூறியுள்ளார்.