வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 15 ஜூலை 2020 (09:50 IST)

கந்தஷஷ்டி கவசத்தின்மேல் கை வைச்சுட்டீங்க, இனி சூரசம்ஹாரம் தான்: எஸ்.வி.சேகர்

திமுக ஆதரவு யூடியூப் பயனாளி ஒருவர் சமீபத்தில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கந்தகஷ்டி கவசத்தில் இடம்பெற்று ஒருசில வார்த்தைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது முருகன் பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அருவருப்பாகவும் ஆபாசமாகவும் அவர் செய்த விமர்சனம் இந்து மத ஆதரவாளர்களை குறிப்பாக முருக பக்தர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது 
 
இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கந்த சஷ்டி கவசத்தை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த அந்த நபர் குறித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது இந்து மத மக்களுக்கு திமுக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே கையிலெடுத்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் பாஜக, நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகரும் பாஜகவின் தீவிர ஆதரவாளருமான எஸ் வி சேகர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: திருட்டு திமுகவின் ஓடி ஒளியும் கறுப்பர் கூட்ட நாய்கள் கரண்டுல கை வைக்கிற மாதிரி கந்த ஷஷ்டி கவசத்தின் மேல் கை வைச்சுட்டீங்க. இனி ஸுர சம்ஹாரத்தை முருகனே செய்வார். #வேல்வேல்வெற்றிவேல் என்று பதிவு செய்துள்ளார்.