வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (13:45 IST)

வேடந்தாங்கல் சரணாலயம்: பரப்பளவை குறைக்கும் முடிவு வாபஸ்

வேடந்தாங்கல் சரணாலயம்: பரப்பளவை குறைக்கும் முடிவு வாபஸ்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த திட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பரபரப்பளவை குறைக்கும் முடிவு திரும்பப் பெறப்படுகிறது என தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது வழங்கப்பட்ட விண்ணப்பத்தை திரும்ப பெறுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் முடிவு கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக அரசு எடுத்த போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது என்பதும் குறிப்பாக திமுக தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது அந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது அடுத்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.