1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (08:22 IST)

அடிமாட்டு விலைக்கு போன விசிக? திருமா கூறுவது என்ன?

திமுகவில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் விசிகவினர் திருப்தியில் இருப்பதாக தெரிகிறது. 

 
திமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றது. 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் விசிகவினர் திருப்தியில் இருப்பதாக தெரிகிறது. 
 
இது குறித்து திருமாவளவன் கூறியதாவது, 5 ஆண்டாக திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வந்தோம். எனக்கு பேரம் பேசும் வலிமை இல்லை. அதிமுக, பாஜகவுடன் போக முடியும் என எண்ணி இருந்தால் இதைக்காட்டி பேரம் பேசியிருக்க முடியும். 
 
வாய்க்கு வந்தபடி எல்லோரையும் அவதூறாக பேசிய பிறகு எனக்கு பேரம் பேச தெரியாது. நாங்கள் 6 தொகுதிகளை வாங்கவில்லை, 6 எம்.எல்.ஏக்களை வாங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.