6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்!
கடந்த 2011ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் வரை பெற்றிருந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகள் கழித்து 6 தொகுதிகளை பெற்றுள்ளது அக்கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காலூன்ற விடக்கூடாது என்பதற்காகவும் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காகவும் திமுக கூட்டணியில் தொடர்ந்து இருப்பதாகவும் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு குறைந்த தொகுதிக்கு ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்
ஆனால் அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளிலும் தனி சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் கூறியுள்ளார்