தொடர்புடைய செய்திகள்
- விஜய் பிரிக்கும் திமுக ஓட்டால் அதிமுகவுக்கு லாபமா? எடப்பாடியார் மீண்டும் முதல்வரா?
- அதிமுக - திமுக.. யார் ஓட்டுக்களை அதிகம் பிரிக்கிறார் விஜய்? சமீபத்திய கருத்துக்கணிப்பு..!
- பாஜகவுக்காக காத்திருந்து பிரயோஜனமில்லை.. விஜய்யை சந்திக்கிறார்களா ஓபிஎஸ், டிடிவி தினகரன்?
- சிராக் பஸ்வான் துணை முதல்வர்? பிகார் அரசியலில் எழுச்சி
- திமுக அரசை வீட்டுக்கு அனுப்பனும்னா எங்க கூட வாங்க! - விஜய்க்கு அழைப்பு விடுத்த நயினார்?
பீகாரில் இந்தியா கூட்டணியை முடிச்சிட்டோம், எங்கள் அடுத்த இலக்கு தமிழ்நாடு தான்: அமித்ஷா
புதுக்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு திரும்பியதை சுட்டிக்காட்டிய அவர், அங்கு இந்தியா கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டார். "பீகாரில் இந்தியா கூட்டணிக்கு முடிவுரை எழுதியாச்சு.. எங்களது அடுத்த இலக்கு தமிழ்நாடு தான்" என்று முழங்கிய அவர், தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் வலுவான என்.டி.ஏ கூட்டணியை அமைப்போம் என உறுதிபட தெரிவித்தார்.
தமிழகத்தில் நிலவும் குடும்ப அரசியலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்கள் மாற்றத்தை விரும்புவதாக குறிப்பிட்ட அமித்ஷா, வரும் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணித்துள்ளார்.
பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சிதறும் என்பதை மறைமுகமாக உணர்த்திய அவரது பேச்சு, தமிழக அரசியல் வட்டாரங்களில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
