விடுதலை சிறுத்தைகள் கேட்கும் ஆறு தொகுதிகள் இவைகள் தான்!

thirumavalavan
விடுதலை சிறுத்தைகள் கேட்கும் ஆறு தொகுதிகள் இவைகள் தான்!
siva| Last Updated: வியாழன், 4 மார்ச் 2021 (15:31 IST)
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தையை கடந்த சில நாட்களாக நடத்திவந்த நிலையில் இன்று அக்கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது

இதனை அடுத்து முக ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் ஆகியோர் அதற்கான ஒப்பந்தத்தில் சற்றுமுன் கையெழுத்திட்டனர். இந்த நிலையில் மதச்சார்பற்ற வாக்குகள் சிதறி விடக்கூடாது என்பதற்காகவும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தமிழகத்தில் காலூன்ற விடக் கூடாது என்பதற்காகவும் தமிழக நலன் கருதியும் குறைந்த தொகுதிக்கு ஒப்புக்கொண்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. செய்யூர், பொன்னேரி, காட்டுமன்னார்கோயில், திட்டக்குடி, வானூர் ஆகிய தனி தொகுதிகளையும், சோழிங்கநல்லூர், மயிலம், திருவள்ளூர், உளுந்தூர்பேட்டை, புவனகிரி ஆகிய பொது தொகுதிகளை கேட்பதாகவும் மேற்கண்ட 10 தொகுதிகளில் 6 தொகுதிகள் ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :