திமுக - விசிக ஒப்பந்தம் கையெழுத்தானது!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஆறு தொகுதிகள் வழங்குவதாக பேசப்பட்டதற்கு விசிக மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மறு பேச்சுவார்த்தைக்கு திமுக விசிக தலைவர் திருமாவளவனை அழைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டி என விசிக முடிவு செய்துள்ளது. அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.