புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (13:32 IST)

பதவியை ராஜினாமா செய்யும் வசந்தகுமார் – ஸ்டாலினை சந்தித்த பின் பேட்டி !

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள வசந்தகுமார் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது பாஜக. காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் பெருந்தோல்வி அடைந்துள்ள நிலையில் தமிழகம் மட்டுமே 9 காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிப் பெறச்செய்து ஆறுதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38-ல் வெற்றி பெற்று திமுக கூட்டணி அசத்தியுள்ளது. கன்னியாகுமரியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அவரை எதிர்த்து நின்ற பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனை விட 3,67 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துவருகிறார். மக்களவை உறுப்பினர் ஆனதை அடுத்து அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் இதை ஊடகங்களிடம் அறிவித்தார். நாளை அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார்.