ஒரு ஓட்டு கூட விழல... என்னத்த சொல்றது? தினகரன் அப்செட்!

Last Modified ஞாயிறு, 26 மே 2019 (11:56 IST)
தமிழ்நாட்டின் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தினகரன் வருத்தம் தெரிவித்துள்ளார். 
 
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அமமுக தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், பெரிய அளவில் தோலிவியை சந்தித்தது.  
 
ஆம், பல தொகுதிகளில் அமமுக மிக மோசமாக தோல்வியை தழுவியது. ஆர்கே நகர் வெற்றிக்கு பின் தினகரனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. 
 
இந்நிலையில், சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மக்கள் தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம். மாபெரும் வெற்றியை எதிர்பார்த்தோம். ஆனால் கிடைக்கவில்லை. 
 
எங்களது கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மக்கள், கட்சிக்காரர்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை போல.
 
ஒரு வாக்குச்சாவடிக்கு 4 முகவர்கள் இருக்கின்றனர். அவர்களின் வாக்குகள் கூடவா அமமுகவிற்கு விழவில்லை. நான் யாரையும் குறை கூறவில்லை. அரசியலில் ஒரே நாளில் எதையும் சாதித்து விட முடியாது. எங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :