வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (13:01 IST)

மக்களவைத் தேர்தலில் வெற்றி.. இடைத்தேர்தலில் ? – கடுப்பான ஸ்டாலின் !

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றாலும் இடைத்தேர்தலில் தோல்வி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாததால் வருத்தத்தில் உள்ளார் ஸ்டாலின்.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்க இருக்கிறது. தென் இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் பெறாமலேயே பாஜக் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது . காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது.

ஆனால் பாஜகவால் ஒருத் தொகுதியைக் கூட வெல்ல முடியாத நிலைதான் தமிழகத்தில் நிலவியது. மொத்தமாக தேர்தல் நடந்த 39 தொகுதிகளில் 38-ல் வெற்றி பெற்று திமுக கூட்டணி அசத்தியுள்ளது. ஆனால் தமிழகத்தில் நடந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13-ல் வெற்றி பெற்று 9-ல் தோற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நடக்கும் என எதிர்பார்த்த திமுகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இதனால் மக்களவைத் தேர்தல் வெற்றிகளை முழுமையாகக் கொண்டாட முடியாத சூழ்நிலையில் உள்ளது திமுக. தோல்வியடைந்த 9 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்கள் மீதும் திமுக தலைவர் ஸ்டாலின் வருத்தத்தில் உள்ளாராம். அதனால் அவர்கள் வகிக்கும் பதவிகளில் வேறு யாராவது அமர்த்தப்படலாம் என திமுக வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.