1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 மார்ச் 2020 (22:02 IST)

இரவிலும் செயல்படும் வண்டலூர் பூங்கா! தமிழக அரசு அதிரடி

சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த உயிரியல் பூங்கா தற்போது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகிறது. மாலை 6 மணிக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பூங்கா பூட்டப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரவில் மின்னொளி விளக்கில் வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய தமிழக அரசு தற்போது முடிவு செய்ய உள்ளது 
 
இதனை அடுத்து இதனை செயல்படுத்தும் வகையில் மின்னொளி அமைப்பது குறித்த ஆலோசனை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உயிரியல் பூங்காவில் இரவு நேரத்திலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது