1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (16:01 IST)

சிங்கத்துடன் ’நேருக்கு நேர்’ நின்ற இளைஞர் ! என்ன தைரியம் ? வைரல் வீடியோ

டெல்லி மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்காவில் ஒரு இளைஞர் பாதுகாப்பு வளையத்தை தாண்டிச் சென்று அங்குள்ள  சிங்கத்துக்கு முன் நேருக்கு நேர் நின்றார். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகிவருகிறது.
டெல்லி மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பூங்கா உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து இங்குள்ள உயிரிங்கல் பறவைகளை பார்த்து ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று டெல்லி வன உயிரியல் பூங்காவில், 21 வயது இளைஞர் ஒருவர் மதியத்திற்கு மேல் உள்ளே நுழைந்தார். அவர் சிங்கங்கள் இருக்கும் பகுதிக்கு சென்று, பாதுகாப்பு வளையத்தை தண்டிக்குதித்து ஒரு பெரிய சிங்கத்தின் முன் உட்கார்ந்து கொண்டார் 
 
எந்த பயமும் அவரிடம் இல்லை. பின்னர், இதைப் பார்த்த வன உயிரியல் பூங்கா அதிகாரிகள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இளைஞரை பாதுக்காப்பாக மீண்டனர். சிங்கமும் நல்ல மூடில் இருந்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டதாகா தகவல்கள் வெளியாகிறது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரிக்கையில் , வட டெல்லியில் உள்ள சீலாம்பூரைச் சேர்ந்த 21 வயது மன நலம் பாதித்த இளைஞர் தான் இந்தக் காரியத்தை செய்தது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.