புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2019 (17:55 IST)

தனது குட்டிகளையே கடித்து விழுங்கிய தாய் சிங்கம்.. உயிரியல் பூங்காவில் நடந்த கொடூர சம்பவம்

ஜெர்மனியில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், தாய் சிங்கம் தனது குட்டிகளையே கொடூரமாக கொன்று விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் லிப்ஸீக் நகரில், பிரபலமான உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவிற்கு பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்த பூங்காவில் சில நாட்களுக்கு முன்பு கிகாலி என்ற பெண் சிங்கம் ஒன்று இரண்டு அழகான குட்டிகளை ஈன்றது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பெண் சிங்கம் தனது இரண்டு குட்டிகளையும் கொன்று விழுங்கியுள்ளது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இது குறித்து அந்த உயிரியல் பூங்காவின் காப்பகத்தினரான மரியா என்பவர், இது சிங்கங்களின் இயல்பு என்றும், சில நேரங்களில் அது தன்னுடைய குட்டிகளையே கொன்று தின்னும் வழக்கம் எல்லா சிங்கங்களிடமும் உண்டு எனவும் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து, விலங்கியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பிரிட்டன் பல்கலைகழக விரிவுரையாளருமான மாரென் ஹெக் என்பவர், காட்டில் பெண் சிங்கங்கள் தனது உடல் பலவீனமாக உணரப்படும் சில நேரங்களில் தனது குட்டிகளையே சாப்பிடும் வழக்கம் உண்டு எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.