1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (18:31 IST)

மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம்: சீன அதிபர் ஆச்சரியம்

சீன அதிபர் இன்று மதியம் சென்னை வந்ததை அடுத்து, இன்று மாலை மாமல்லபுரம் வருகை தந்தார். அவரை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு கொடுத்தார்.
 
இருவரும் மின்னொளியில் ஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரை கோயிலிலுக்கு சென்றனர். அங்குள்ள சிற்பங்களின் சிறப்புகளை சீன அதிபரிடம் பிரதமர் மோடி  விளக்கினார். அதனை சீன அதிபர் ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்
 
கடற்கரை கோயிலில் உள்ள சிற்பங்களின் முன் இரு தலைவர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரையும் கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர்
 
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது