வெள்ளி, 31 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified செவ்வாய், 7 மார்ச் 2023 (17:42 IST)

வடமாநில தொழிலாளர்கள் பிரச்சனைக்கு காரணமே திமுக தான்: வானதி சீனிவாசன்..!

vanathi
வடமாநில தொழிலாளர் பிரச்சனைக்கு காரணம் திமுக தான் என்றும் தற்போது பிரச்சனை பெரிதானவுடன் ஆட்சிக்கு ஆபத்து என்று முதலமைச்சர் கூறுவது ஏன் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 
இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். வடமாநில தொழிலாளர் விவகாரம் ஜனவரியிலிருந்து நடக்கிறது என்றும், ஆனால் தமிழக அரசோ முதல்வரோ கருத்து தெரிவிக்காமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சனை பெரிதானவுடன் நடவடிக்கை எடுக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
வட மாநில தொழிலாளர் பிரச்சினையால் தமிழகம் பாதிக்கட்டும் என்று தமிழக அரசு இருக்கின்றதோ என்று சந்தேகமாக இருக்கிறது என்றும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து தமிழக அமைச்சர்களே பானிபூரி விற்பனை குறித்தும் ஹிந்தி பேசும் தொழிலாளர்கள் குறித்தும் விமர்சனம் செய்தனர் என்றும் இந்த பிரச்சனைக்கு மூல காரணமே திமுகவினர் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
முதலமைச்சருக்கு ஆட்சிக்கு ஆபத்து என்ற உணர்வு ஏற்பட்டால் அதற்கு மூல காரணம் யார்? இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran