வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (12:34 IST)

பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவை 20ம் தேதி வரை கைது செய்ய தடை! நீதிமன்றம் உத்தரவு..!

Delhi Court
பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ் என்பவரை மார்ச் 20 ஆம் தேதி வரை கைது செய்ய தடை என டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பிய உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உமாராவ் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த நிலையில் முன் ஜாமின் கேட்டு பிரசாந்த் உமாராவ் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தூத்துக்குடி நீதிமன்றத்தை நாட டெல்லியின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் பிரசாந்த் உமாராவை வரும் 20ம் தேதி வரை கைது செய்ய தடை என்றும் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து பிரசாந்த் உமாராவ் தூத்துக்குடி நீதிமன்றத்தில் முன்ஜாமின் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran