ஒரு கட்சியிலிருந்து பிறகட்சிக்கு செல்வது நல்லது: அண்ணாமலை
ஒரு கட்சியில் இருந்து பிற கட்சிக்கு செல்வது நல்லது தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவில் இருந்து சமீபத்தில் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் மற்றும் ஐடி விங் செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர் திடீரென விலகி அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில் தமிழக பாஜகவில் இருந்து பிரபலங்கள் விலகிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது, ஒரு கட்சியில் இருப்பவர்கள் பிற கட்சிக்கு செல்வது நல்லது தானே என்று கூறிய அவர் திராவிட கட்சிகளில் இருப்பவர் பாஜகவுக்கு வருகின்றனர் என்ற நிலை மாறி உள்ளது என்று தெரிவித்தார். பாஜகவில் இருந்து திராவிட கட்சிகளுக்கு செல்கின்றனர் என்றும் ஆனாலும் பாஜக வளர்ந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்றவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அண்ணாமலையின் நெருங்கிய நண்பர் அமர்பிரசாத் ரெட்டி கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து பாஜக அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Edited by Mahendran