வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (17:06 IST)

கொரொனா காலத்தில் நடிகைகள் பெயரில் போலி சான்றிதழ்கள் - எதிர்க்கட்சி எம்.எல்.ஏ கேள்வி

corono
பிரபல நடிகைகள் பெயரில் போலி கொரொனா சான்றிதழ்கள் வெளியான விவகாரத்தில் குஜராத் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

குஜராத்  மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, பாலிவுட் நடிகைகளின் பெயரில் போலி கொரொனா சான்றிதழ்கள் வெளியானது. இதுபற்றி இன்று குஜராத் சட்டசபை கேள்வி  நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ இம்ரான் கெடாவாலா கேள்வி எழுப்பினார்.

இதற்கு சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல், ''கொரொனா காலத்தின் நடத்தப்பட்டபோது, சிறப்பு முகாம் நடந்தது. அடையாள அட்டைகளை காண்பிக்காமல், கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.

இந்த முகாமில், அடையாள அட்டைகள் இல்லாத பிச்சைக்காரர்கள், புலம்பெயர்ந்தோடுக்கு சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களின் பெயர்களைத்தான் அதிகாரிகள் அவசரமாக எழுதியுள்ளனர் என்று கூறினார்.

மேலும், இதுபற்றி முழுமையாக விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,  அவர்கள் தொடக்க ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதாகவும்'' கூறினார்.