1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (10:42 IST)

சமூக நீதியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசால் முடியவில்லை: வானதி சீனிவாசன்

சமூக நீதி குறித்து பேசும் திமுக அரசு அந்த சமூகநீதியை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
தேவகோட்டை அருகே மேல்நிலைப்பள்ளி ஒன்றின் பூமி பூஜையில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் ’சமூகநீதி பேசுகின்ற மாநிலத்தில் இளம் வயதில் இருக்கும் மாணவர்கள் ஒரு வகையான தாக்கத்திற்கு ஆளாகின்றனர். தமிழகத்திற்கு இது ஆபத்தானது. 
 
திமுக அரசால் சமூகநீதியை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை என்பது மோசமான விஷயம் என்று தெரிவித்தார்.  பேசுவதற்கும் செயல்பாட்டிற்கும் வித்தியாசம் இருப்பதால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் பிரிவினையை வைத்து வெறுப்பினை விதைக்கின்ற பல்வேறு விதமான விஷயங்கள் நம்மை சுற்றி நடந்து கொண்டிருக்கின்றன என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்
 
Edited by Siva