1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vanathi Srinivasan opens up about 5G Spectrum auction

ஆ.ராசாவுக்குதான் ஊழல் செய்ய தெரியும்: வானதி சீனிவாசன்!

5ஜி அலைக்கற்றை ஏலம்
5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கருத்து.


5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஏழு நாட்களாக நடந்த நிலையில் ஏலம் முடிவடைந்தது என மத்திய தொழில்நுட்பத் துறை  அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் அதானி ஆகிய நான்கு நிறுவனங்கள் கலந்து கொண்டதாகவும் இதில் அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்த தாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 7 நாட்களில் நடந்த சுற்றுகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக கூறப்பட்ட நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐந்து லட்சம் கோடிக்கு விற்க வேண்டிய ஏலம் வெறும் ஒன்றரை லட்சம் ரூபாய் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது  என்றும் மீதமுள்ள பணம் எங்கே சென்றது என்றும் அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரினார்.

இதனைத்தொடர்ந்து பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் இது தெரிவித்துள்ளதாவது, 5ஜி அலைக்கற்றை ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் லாபத்தை பெற்று தந்துள்ளது.

அலைக்கற்றை பற்றி குறை கூறும் ஆ.ராசாவுக்குதான் இதில் எவ்வாறு ஊழல் செய்யலாம் என தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மெரினாவில் நடக்கவுள்ள 75 - வது சுதந்திர தினவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி !