திராவிட மண்ணில் பாஜக வர முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!
திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
கர்நாடக மாநில தேர்தல் முடிவு வெளியான போது திராவிட மண்ணிலிருந்து பாஜக விரட்டி அடிக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் என்றும் தமிழ்நாட்டில் எத்தனையோ முறை திமுக தோல்வியை சந்தித்துள்ளது என்றும் கூறினார்.
ஒரு தேர்தல் தோல்வியை வைத்துக்கொண்டு எதையும் கூறிவிட முடியாது என்றும் திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என முதல்வர் முக ஸ்டாலின் அவருடைய திருப்திக்காக கூறி வருகிறார் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக புதுச்சேரியில் மீனவர்களின் குறை கேட்கும் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva