வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (21:26 IST)

கோவையில் அண்ணாமலை போட்டியிடுவது பற்றி வானதி சீனிவாசன் பேட்டி

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள்  கூட்டணியில் இணைந்துள்ள நிலையில்,தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
 
பாஜக ஆதரவாளரான ஓபிஎஸ் தேர்தலில் போட்டியா?இல்லையா என்ற தன் நிலைப்பாட்டை நாளை அறிவிக்கவுள்ளார்.
 
ஏற்கனவே பாஜகவின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், தமிழ் நாட்டு வேட்பாளர்கள் பெயர் இடம்பெறவில்லை.
 
இன்று தமிழ் நாட்டு வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் வினோத் பி. செல்வம் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரியில் நரசிம்மன் போட்டியிடுகிறார். நீலகிரியில் எல் முருகனும், கோயம்புத்தூரியில் அண்ணாமலையும், பெரம்பலூரில்  பாரிவேந்தரும், தூத்துக்குடியில் நயினார் நாகேந்திரனும், கன்னியாகுமரியில்  பொன் ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.
 
இதில் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: வரும் மக்களவை தேர்தலில் வெற்றிக் கூட்டணி என்பது பாஜகவிடமே இருக்கிறது. கோவை தொகுதியில் அண்ணாமலையின் வெற்றி உறுதி செயப்பட்ட வெற்றியாகவே பாஜக பார்க்கிறது என்று தெரிவித்துள்ளார்.