வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 21 மார்ச் 2024 (21:24 IST)

காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது!

congress
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி தேர்தல் விதிகள்  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.
 
இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
 
ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 2 கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
 
தமிழ் நாட்டில் திமுகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் யார் என்பதை இன்று கட்சி மேலிடம் முடுவெடுக்கும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  கூறியிருந்தார்.
 
அதன்படி, மக்களவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதர்காக டெல்லியில் மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.