வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (21:25 IST)

தீண்டாமைச் சுவர்: இயக்குனர் ரஞ்சித்துக்கு வானதி ஸ்ரீநிவாசன் கேட்ட கேள்வி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து 17 பேர் பலியான துயரமான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்தது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த 17 பேர் மரணத்தை வைத்து அரசியல் செய்து அரசியல் கட்சிகளும், ஒரு சில திரையுலக பிரபலங்களையும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஏதாவது ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்ததும், அந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யும் வழக்கம் கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் இருந்து வருவது விரும்பத்தகாத ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த நிலையில் 17 பேர் மரணம் குறித்து தனது டுவிட்டரில் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தீண்டாமை சுவர் இருந்ததன் காரணமாக 17 பேர் பலியாகி விட்டதாகவும் இன்னும் இதுபோன்ற சுவருக்கு எத்தனை பேர் பலியாக போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். ரஞ்சித்தின் இந்த டுவீட்டுக்கே நெட்டிசன்கள் பலர் கடுமையாக பதிலடி கொடுத்திருந்தனர்
 
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள், ‘தீண்டாமைச்சுவர் என்ற வார்த்தையை நீங்கள் எங்கே இருந்து கண்டுபிடித்தீர்கள் என்று தெரியவில்லை. அதை நீங்கள்தான் சொல்லவேண்டும். சுவரின் இருபுறமும் இருப்பவர்கள் நிலத்தின் உரிமையாளர்கள் தான். எந்த பக்கம் சுவர் இருந்தாலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதில் ஜாதியை பூசை முயல்கிறீர்கள் என்று அவர் கூறியுள்ளார் 
 
வானதி ஸ்ரீநிவாசன் என்ற கேள்விக்கு பா.ரஞ்சித் என்ன பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்