வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (20:31 IST)

அப்டேட் கேட்டு பழிக்கு பழிவாங்கும் அர்ச்சனா கல்பாதி!

விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்து கொண்டிருந்தபோது அர்ச்சனா கல்பாத்தியிடம் விஜய் ரசிகர்கள் அவ்வப்போது அந்த படத்தின் அப்டேட்டை கேட்டு தொல்லை செய்தனர் என்பது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் எல்லை மீறி அர்ச்சனா கல்பாத்தியை அவர்கள் திட்டவும் செய்தனர். ஆனால் அவற்றை எல்லாம் பொறுமையாக கடைபிடித்து, படத்தின் அப்டேட்டை அவ்வப்போது வழங்கி ரசிகர்களை அவர் திருப்தி செய்யும் முன் போதும் போதும் என்றாகிவிட்டது 
 
ரூ.180 கோடி பட்ஜெட்டில் பிகில் படத்தை தயாரிக்கும் பணியை விட அவருக்கு விஜய் ரசிகர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது. இவ்வளவிற்கும் அவரும் ஒரு தீவிர விஜய் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது ஒரு ரசிகையாக அவர் ’தளபதி 64’ படத்தின் அப்டேட்டை கேட்டு தனது டுவிட்டரில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். தளபதி 64 படத்தின் அப்டேட்டை கொடுங்கள், ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணுங்க, ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்துக்கொண்டே இருங்கள் என்று அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் 
 
தான் விஜய் படம் தயாரித்தபோது பட்ட கஷ்டங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து அவர் தற்போது விஜய் 64 படத்தின் தயாரிப்பாளரை கேள்வி மேல் கேள்வி கேட்டு வருவதாக விஜய் ரசிகர்கள் நகைச்சுவையுடன் தெரிவித்து வருகின்றனர்