செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (21:13 IST)

ஷூவுக்குள் இருந்த பாம்பு ... பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் !

சென்னை கே.கே.நகரை அடுத்துள்ள கன்னிகாபுரம் 3 வது தெருவில் வசித்து வந்தவர் பழனி. இவரது மனைவி சுமித்ரா. இவர், தன் வீட்டை நேற்று சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து ஷூவை எடுத்து சுத்தம் செய்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அந்த ஷூவுக்குள் இருந்த பாம்பு அவரைக் கடித்ததால், சுமித்ரா கத்திக் கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு எதோ அசம்பாவிதம் நடத்துள்ளதாக நினைத்தி அருகில் உள்ள வீட்டார் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 
 
பின்னர்,உடனே சுமித்ராவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.