புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (19:16 IST)

2018ல் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - இந்தியா 5-வது இடம்!

2018ம் ஆண்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் அதிக பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று ஆண்டுதோறும் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் நாடுகள் சந்திக்கும் பொருளாதார ரீதியான பிரச்சினைகள், உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

அந்த ஆய்வு நிறுவனம் 2018ல் அதிக பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பான். தொடர்ந்து பல்வேறு புயல்களையும், எரிமலை வெடிப்புகளையும் சந்தித்து வரும் தேசமான ஜப்பான் ஆண்டுதோறும் பல உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது.

இரண்டாவது இடத்தில் பிலிப்பைன்ஸும், மூன்றாவது இடத்தில் ஜெர்மனியும், நான்காவது இடத்தில் மடகாஸ்கர் தீவும் உள்ளது. இதையடுத்து ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் கேரள வெள்ளம், கஜா புயல் போன்ற பெரும் இயற்கை பேரிடர்களை இந்தியா சந்தித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் இந்த பட்டியலில் 14வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பருவநிலை மாற்றத்தால் தீவிரமாக பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் முக்கியமான ஒரு பகுதி என்று கூறப்படுகிறது.